2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மேடையிலேயே நடிகைக்கு முத்தம் கொடுத்த இயக்குநர்

Editorial   / 2023 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சினிமா நிகழ்ச்சி மேடையில் இயக்குநர் ஒருவர் நடிகைக்கு முத்தமிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் ஏ.எஸ். ரவிகுமார் சவுத்ரி இயக்கத்தில் ராஜ் தருண் கதாநாயகனாக நடிக்கும் 'திரகபாதர சாமி' என்ற திரைப்படத்தில் நாயகியாக மன்னரா சோப்ரா நடித்துள்ளார்.

படத்தின் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ கலந்து கொண்டு படத்தின் டீசரை வெளியிட்டார். அப்போது படக்குழுவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அப்போது, இயக்குநர் ஏ.எஸ். ரவிகுமார் சவுத்ரி, நடிகை மன்னரா சோப்ரா அருகில் நின்று கொண்டிருந்தார். திடீரென, படத்தின் இயக்குநர் நடிகையின் கன்னத்தில் முட்டமிட்டார். எதிர்பாராத இயக்குநர் இந்த செயலால் மேடையில் இருந்த நடிகை உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X