Freelancer / 2024 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

யுவன் சங்கர் ராஜா மீது நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி மேலும் தெரியவருகையில், சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், ஜமீலா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் யுவன் சங்கர் ராஜா வாடகைக்கு குடியிருந்து வநதுள்ளார். இந்நிலையில் ஜமீலாவின் சகோதரர் முகமது ஜாவித் பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், 20 இலட்சம் ரூபாய் வாடகை பாக்கியை வழங்காமல் யுவன் சங்கர் ராஜா இழுத்தடித்து வந்ததாகவும், போனில் தொடர்பு கொண்டாலும் பதில் அளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், முறைப்படி எந்த தகவலும் அளிக்காமல் யுவன் சங்கர் ராஜா திடீரென வீட்டைக் காலி செய்து சென்றுவிட்டதாகவும், அவர் வீட்டைக் காலி செய்த தகவல் அருகில் வசிப்பவர்கள் மூலம் தான் தங்களுக்கு தெரியவந்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டில் உள்ள பொருட்களை யுவன் சங்கர் ராஜா சேதப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். வாடகை பாக்கியை வழங்காததாலும், சேதத்துக்கு நஷ்ட ஈடு தராததாலும் யுவன் சங்கர் ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகமது ஜாவித் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மீதான இந்தப் புகார் சினிமா வட்டாரத்தில் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.S
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago