2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

யூடியூபில் முதல் இடம் பிடித்த ’ஜெயிலர்’

Freelancer   / 2023 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஷோகேஸ் வீடியோவை படக்குழு புதன்கிழமை(02) மாலை வெளியிட்டது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஷோகேஸ் வீடியோ யூடியூபில் முதல் இடம் பிடித்து டிரெண்டிங்கில் உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X