Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆந்திர அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் ரோஜா, எம்.எல்.ஏ ஆக உள்ளார். அடிக்கடி அதிரடியாக பேசி பரபரப்பை ஏற்படுத்தும் ரோஜாவை பற்றி சமீபத்தில் இணையத்தளத்தில் அவர் உயிருடன் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் பரவியது.
இதுகுறித்து விசாரித்து ரோஜாவுக்கு நிறைய அழைப்புகள் வந்தன. இதையடுத்து கோபம் அடைந்த ரோஜா வதந்தி பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து ரோஜா கூறும்போது, போலியாக தயாரிக்கப்பட்ட எனது படத்தை யாரோ பயன்படுத்தி நான் இறந்துவிட்டதாக என்னைப்பற்றி இணைய த்தளத்தில் வதந்தி பரப்பி உள்ளனர்.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். அவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள்’ என்றார்.
ரோஜா மட்டுமல்ல மேலும் சில நட்சத்திரங்கள்பற்றி அவ்வப்போது இதுபோன்ற வதந்திகள் இணையத்தளம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பரப்பப்பட்டுவருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago