Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் திரையுலகத்தில் நடிக்க வந்து பத்து வருடங்களில் எத்தனையோ கிசுகிசுக்கள், காதல் பஞ்சாயத்துகள் என பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் இன்றும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா.
நயன்தாராவின் வயது ஏறினாலும் மவுசு மட்டும் குறையாமலே உள்ளது. இன்னமும் அவருடன் ஜோடியாக நடிக்க பல இளம் நடிகர்கள் கூட காத்துக்கொண்டிருக்கின்றனர்.
நயன்தாரா, தற்போது கூட கைவசம் நான்கைந்து திரைப்படங்களை வைத்துக் கொண்டு பிஸியாகவே சுற்றிவருகின்றார்.
இருந்தாலும், அண்மையில் அவர் நடித்த சில திரைப்படங்கள் தோல்வியாக அமைந்து அவருடைய வெற்றிப் பாதைக்கு கொஞ்சத் தடையாக இருந்ததுடன் ராஜா ராணி தான் நயன்தாரா நடித்து கடைசியாக வெற்றி பெற்ற திரைப்படம்.
அதற்கடுத்து வெளிவந்த ஆரம்பம், இது கதிர்வேலன் காதல், நீ எங்கே என் அன்பே, நண்பேன்டா, மாஸ் ஆகிய ஐந்து திரைப்படங்களும் தோல்வி வரிசையில் சேர, தொடர் தோல்விகளால் நயன்தராவின் இராசியைப் பற்றியும் சிலர் பேச ஆரம்பித்தார்கள்.
நல்லவேளையாக, கடந்த வாரம் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படம் நயன்தாராவுக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மீண்டும் வெற்றிப் பாதைக்கு அவர் திரும்பியிருக்கிறார்.
மாயா, நானும் ரௌடிதான், இது நம்ம ஆளு, திருநாள் என வரிசையாக நயன்தாராவின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன.
இந்த திரைப்படங்கள் மூலமாக நயன்தாராவின் வெற்றிப்பாதை இன்னும் நீளும் என சினிமா அவதானிகள் கூறுகின்றனர்.
6 minute ago
38 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
38 minute ago
48 minute ago
1 hours ago