Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூலை 11 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிவூட் நடிகர் சல்மான் கான் - அனுஷ்கா சர்மா ஜோடியாக நடித்த சுல்தான் திரைப்படம், கடந்த 6ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியானது.
இந்தியாவில் மட்டும் சுமார் 5 ஆயிரம்; திரையரங்குகளில் வெளியான சுல்தான் முதல்நாள் டிக்கெட் விற்பனையின் மூலம் மட்டும் 36.54 கோடி இந்திய ரூபாயை வசூலித்தது.
மூன்று நாட்களில் இந்தியா முழுவதும் 106 கோடி இந்திய ரூபாயை வசூலித்த சுல்தான், ஷாருக்கானின் ஹெப்பி நியூ இயர், பேன் மற்றும் சல்மான் கானின் பிரேம் ரத்தன் தன் பாயோ ஆகிய திரைப்படங்களின் முந்தைய வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
நான்காம் நாளான சனிக்கிழமை நிலவரப்படி ஒரேநாளில் சுமார் 36 கோடி இந்திய ரூபாயை சுல்தான் அள்ளியுள்ளது. நான்கு நாட்களில் 142 கோடி 62 இலட்சம் இந்திய ரூபாயை சம்பாதித்ததன் மூலம், ஹவுஸ் புல் (107 கோடி இந்திய ரூபாய்), ஏர்லிப்ட்(127 கோடி இந்திய ரூபாய்) ஆகிய இந்த ஆண்டின் பொலிவூட் வசூல் சாதனைகளை சுல்தான் முறியடித்துள்ளது.
இந்த வெள்ளிக்கிழமைக்குள் 180 கோடி இந்திய ரூபாய் என்ற இலக்கை சுல்தான் எட்டி மிகப்பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
27 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
2 hours ago