Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயகுமார் கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக குணச்சித்திர நடிகை விசித்திராவை களமிறக்க தயாரிப்புக் குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 23ஆம் திகதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முதல் ஆளாக வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு, முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார்.
அவரை தொடர்ந்து வலிமையான போட்டியாளராக கருதப்பட்ட நடிகை வனிதா விஜயகுமார் கடந்த வாரம் வெளியேறினார்.
இதற்கிடையில் வனிதாவுக்கு பதிலாக, பிரபல நடிகை ஒருவரை, பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப நிகழ்ச்சி தரப்பு முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்ட இவர், பிக்பாஸ் மூலம் மீண்டும் மறுப்பிரவேசம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
யார் இந்த நடிகை விசித்திரா?
தமிழ் சினிமாவிற்குள் 90-களின் மத்தியில் கால்பதித்தவர் நடிகை விசித்திரா. தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்கள், நகைக்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
‘பெரிய குடும்பம்’, ‘முத்து’போன்ற படங்களில் இவருடைய கதாபாத்திரத்திற்கு பிரத்யேக முக்கியத்துவம் வழங்கப்படும் அளவுக்கு விசித்திரா முக்கிய நடிகையாக இருந்தார்.
அத்துடன், ஒருசில தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரை மணந்து கொண்ட விசித்திரா புனேவில் வசித்து வருகிறார்.
அண்மையில் அவருடைய கணவர் சென்னை இ.சி.ஆரில் சொந்தமாக உணவகம் தொடங்கினார். இதனால் வணிக நிமித்தமாக அவ்வப்போது புனேவில் இருந்து சென்னைக்கு வந்து செல்கிறார் விசித்திரா.
தொடக்கத்தில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இவரும் பங்கேற்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் சில ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்த போது, அவற்றை மறுத்தார் விசித்திரா.
முன்னதாக, இதேபோன்ற செய்தி வெளியான போது மதுமிதா அதற்கு மறுப்பு தெரிவித்தது நினைவிருக்கலாம். ஆனால் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக இருந்து வருகிறார்.
இதனால் விசித்திரா விரைவில் பிக்பாஸ் வீட்டுக்குள் பிரவேசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago