2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

விபத்தில் நடிகர் மனோ மரணம்

Editorial   / 2019 ஒக்டோபர் 29 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடி பிரபலமானவர் மனோ. புழல் என்ற படத்தில் மூன்று நாயகன்களில் ஒருவராக அறிமுகமானார். 

மேலும் பல படங்களில் சிறிய பாத்திரங்களில் நடித்தார். தமிழ்நாடு முழுவதும் மேடை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்.

இவர் நேற்று தனது மனைவி லிவியாவுடன் அம்பத்துாரில் காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மனோ அதே இடத்தில் மரணமடைந்தார். 

பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய அவரது மனைவியை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மனோவின் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X