Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 நவம்பர் 15 , பி.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் ஆகிய இருவரும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவரும் காதலித்து கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், 2018ம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அண்மையில் சானியா மிர்சாவின் இன்ஸ்டாகிராம் பதிவு, சானியா - சோயப் மாலிக் ஜோடியின் பிரிவை உணர்த்தும் சமிக்ஞையாக இருந்தது. "உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன? அல்லாவைக் காண" என்று சானியா பதிவிட்டிருந்தார். சானியா மிர்சாவின் இந்த பதிவு விவாகரத்து சர்ச்சையை எழுப்பியது.
இதற்கிடையில், மாலிக் மற்றும் மிர்சாவின் திருமண வாழ்க்கை விரிசலுக்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் மாடல் ஆயிஷா உமர் என்று கூறப்பட்டது. ஆயிஷாவுடனான அவரது நெருக்கமே மிர்சாவுடனான அவரது திருமண வாழ்க்கை விரிசலுக்கு வழிவகுத்தது என்று வதந்திகள் பரவின.
இதை தொடர்ந்து சானியா மிர்சா - சோயப் மாலிக் தம்பதி அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாக மாலிக்கின் நெருக்கமான வட்டாரம் தெரிவித்தாக தகவல் வெளியானது.
இந்த தகவல் இரு நாட்டு விளையாட்டு ரசிகர்களுக்கும் பெரும் வேதனையாக இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் தொலைகாட்சி ஒன்றில் மிர்சா - மாலிக் என்ற நிகழ்ச்சியை இருவரும் இணைந்து தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியானது.
சானியா மிர்சா - சோயப் மாலிக் ஜோடி விவாகரத்து பெற்றுவிட்டதாக தகவல் பரவிய நிலையில், இருவரும் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று 36வது பிறந்தநாள் கொண்டாடும் சானியா மிர்சாவுக்கு சோயப் மாலிக் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து கூறியுள்ளார்.
இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஷோயப் மாலிக், பிறந்தநாள் வாழ்த்துக்கள் சானியா மிர்சா.. ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துக்கள். பிறந்தநாளான இன்று மகிழ்ந்திருக்குமாறு வாழ்த்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
21 minute ago
41 minute ago