George / 2016 மே 30 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனுஷ் நடிப்பில் தங்கமகன் திரைப்படம் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் வெளியானது. தனுசுக்கு ஜோடியாக சமந்தா, எமிஜெக்சன் நடித்திருந்த அந்தத் திரைப்படம் தனுசுக்கு அதிர்ச்சி தோல்வியாக அமைந்தது.
அதையடுத்து தொடரி, கொடி திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் பிரபுசொலமன் இயக்கத்தில் நடித்துள்ள தொடரியின் இறுதிகட்ட பணிகள் சில மாதங்களுக்கு முன்பே நடந்து முடிந்து விட்ட நிலையில், படத்தை சரியான நேரத்தில் வெளியிட வேண்டும என்று நேரம் பார்த்து வந்தார்கள்.
இந்நிலையில், ஜூன் மாதம் இறுதியில் அந்த திரைப்படத்தை வெளியிட பிரபுசொலமன் திட்டமிட்டுள்ளார்.
இதேவேளை, தனுஷ் நடித்து வந்த கொடி திரைப்படமும் கிட்டத்தட்ட வெளியிட தயாராகி விட்ட நிலையில், ஜூலையில் வெளியிட போவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதோடு, கௌதம்மேனன் இயக்கத்தில் நடித்து வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் தற்போது விறுவிறுப்பாக நடித்து வரும் தனுஷ், ஜூன் மாதம் அப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொடுத்து விட்டு கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க செல்வார் என்கிறார்கள்.
ஆக, செப்டம்பர் அல்லது ஒக்டோபரில் அந்தத் திரைப்படமும் திரைக்கு வருகிறதாம். அந்த வகையில், இந்த 2016ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் 3 திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன.
22 minute ago
26 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
31 minute ago