Menaka Mookandi / 2017 மார்ச் 21 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1622: வேர்ஜினியாவில் ஜேம்ஸ்டவுன் நகரில், அல்கோன்கியான் பழங்குடிகள், 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர்.
1829: கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியன வரையறுத்தன.
1873: புவேர்ட்டோ ரிக்கோவின் ஸ்பானிய தேசிய சபையில், அந்நாட்டில் அடிமைத் தொழிலை அழிக்க சட்டமியற்றப்பட்டது.
1895: முதன் முதலாக லூமியேர சகோதரர்கள், அசையும் திரைப்படத்தை பிரத்தியேகமாகக் காண்பித்தார்கள்.
1939: இரண்டாம் உலகப் போர் - ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது.
1943: இரண்டாம் உலகப் போர் - பெலாரசின் காட்டின் நகர மக்கள் அனைவரும் நாசி ஆதிக்கவாதிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
1945: அரபுக் கூட்டமைப்பு, கெய்ரோவில் அமைக்கப்பட்டது.
1960: ஆர்தர் ஷாவ்லொவ், மற்றும் சார்ல்ஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்கள்.
1965: இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.
1993: இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப் (80586) இனை அறிமுகம் செய்தது.
1995: சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.
1997: ஹேல்-பொப் வால்வெள்ளி பூமிக்குக் கிட்டவாக வந்தது.
2004: ஹமாஸ் இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான அஹமது யாசின், இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
2006: பாஸ்க் ஆயுதக்குழுவான ஈடிஏ, காலவரையறையற்ற போர் நிறுத்தத்தை அறிவித்தது.
30 minute ago
43 minute ago
48 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
43 minute ago
48 minute ago
54 minute ago