Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 2017ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து அலைபேசிகளும் கட்டாயம் எச்சரிக்கை பொத்தானை கொண்டிருக்க வேண்டும் என இந்தியாவின் தொலைத்தொடர்புகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறையின் மட்டங்கள் அதிரித்துச் செல்வது தொடர்பில் அதிக கரிசனை வெளியிடப்பட்டுள்ள நிலையில், பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட பரவலான பிரசாரத்தின் ஒரு அங்கமாகவே மேற்படி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, 2018ஆம் ஆண்டு முதல் அலைபேசிகள், இடஞ்சுட்டல் அமைப்புக்களையும் கொண்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மையப்படுத்தப்பட்ட அவசரகால தொலைபேசி இலக்கம் ஒன்று இல்லாதபோதும் இவ்வருடம் அதை அறிமுகப்படுத்த அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மனித வாழ்வை மேம்படுத்த மட்டுமே தொழில்நுட்பம் உள்ளது என்றும் அதை பெண்களின் பாதுகாப்புக்கு பயன்படுத்துவதை விட சிறந்தது எது என்று இந்தியாவின் தொடர்பாடல் மாற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் எச்சரிக்கை பொத்தான் அமைப்பு எவ்வாறு செயற்படும் என்பது தெளிவில்லாமல் உள்ளபோதிலும் திறன்பேசிகளில் தனித்த எச்சரிக்கை பொத்தானை அழுத்துவதன் மூலமோ அல்லது திறன்பேசியை நிறுத்தும் பொத்தானை குறுகிய இடைவேளைகளில் சில தடவைகள் வேகமாக அழுத்துவதன் மூலமோ வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையை அனுப்ப முடியுமென்பதுடன் ஏனைய அலைபேசிகளில் இலக்கம் ஐந்தும் ஒன்பதும் அவசரகால நிலைக்கான பொத்தானாக இருக்கும் என நம்பப்படுகிறது.
7 minute ago
21 minute ago
37 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago
37 minute ago
48 minute ago