Editorial / 2019 மே 13 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு விட்டு நாடு தாவக்கூடிய அல்லது கண்டம் விட்டு கண்டம் தாவக்கூடிய ஏவுகணைகளை தாக்கி அழிப்பதற்கு புதிய தொழில்நுட்பம் ஒன்றை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.
Self-Protect High Energy Laser Demonstrator (SHiELD) என அழைக்கப்படும் இம்முறைமையானது லேசர் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முதன் முறையாக அமெரிக்கா பரிசீலித்து பார்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்பரிசீலிப்பானது தரையிலிருந்தும், விமானங்களிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் விமானப்படை ஆய்வுகூடத்தின் கொமாண்டர் மேஜர் ஜெனரல் வில்லியம் கூலே தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பமானது லேசர் முறை, கட்டுப்படுத்தும் முறை மற்றும் வலுச் சேர்க்கும் முறை எனும் மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago