Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜனவரி 09 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒவ்வொரு நாளும் கணனிச் சாதனங்களின் அளவானது குறுகிக் கொண்டு வருகையில், கடந்த செவ்வாய்க்கிழமை Intel நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியான பிரயன் கர்சனிச், லாஸ் வேகாஸில் நுகர்வோர் இலத்திரனியல் கண்காட்சியில், வான்வெளியில் தங்களது பெரும் முயற்சிகளின் ஓர் அங்கம் தொடர்பான தகவல்களை அறிவித்துள்ளார்.
முதன்முறையாக, ஒரு வருடத்துக்கு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட Curie எனப்படும் Intel நிறுவனத்தின், பொத்தான் அளவிலான அணியக்கூடிய வன்பொருளானது, இந்தக் காலாண்டில் சந்தைக்கு வரவுள்ளதுடன், இது, பத்து அமெரிக்க டொலருக்கு குறைவாவே இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இலவச சவாரி மற்றும் BMX உள்ளடங்கலாக கவர்ச்சிகரமான விளக்கவுரைகளை Intel முன்வைத்திருந்ததுடன், இதைப் பிரபலமாக்கும் முயற்சியில், ESPN மற்றும் Red Bull Media மற்றும் வேறு சில நிறுவனங்களுடன் இணைப்பை மேற்கொண்டு தடகள வீரர்களின் பெறுபேறுகளை கண்காணிக்க தமது chipஐ இணைக்கவுள்ளது. இதேவேளை, அடுத்த தலைமுறை கணனியியலில் தனது வகிபாகத்தை முன்னேற்றும் பொருட்டு பிரபலமான லேடி காகா போன்றவர்களுடனான இணைப்பையும் வழங்கியிருந்தது.
தமது சாதனம் காரணமாக, தடகள வீரர்கள் எவ்வாறு கணிக்கப்படுகிறார்கள், எவ்வாறு பயிற்சியளிக்கப்படுவார்கள் என்பதில் மாற்றம் ஏற்படும் என்று கர்சனிச் தெரிவித்துள்ளார்.
ESPN நிறுவனத்துடான இணைப்பானது 2016 அஸ்பெனில் இடம்பெறவுள்ள X விளையாட்டுக்களிலிருந்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உடனனுக்குடன் தடகள வீரர்களின் வளித் திரும்பல்கள், பாய்ந்த உயரம், பாய்ந்த தூரம், வேகம், சக்தி, தரையிறங்குகை போன்ற பெறுபேறுகள் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
21 minute ago
41 minute ago