Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜனவரி 19 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்லாத்தை அவமதிப்புக்குட்படுத்தப்பட்டதாகக் கருதப்பட்ட காணொளியை இட்டமை காரணமாகத் தடை செய்யப்பட்டிருந்த காணொளி பகிர்வு இணையத்தளமான யூட்யூப்பின் தடையை, மூன்றுக்கு மேற்பட்ட வருடங்களுக்குப் பின் பாகிஸ்தான் நீக்கியுள்ளது.
பாகிஸ்தானுக்காக தனியான பதிப்பு இணையத்தளத்தை, யூட்யூப்பை நிர்வகிக்கும் கூகிள் வெளியிட்டதன் காரணமாக, இனிமேல் தடைக்கான அவசியமில்லை என பாகிஸ்தானுடைய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
எனினும் யூட்யூப்பில் இடப்படும் காணொளி உள்ளீடுகளை அதிகாரிகள் வடிகட்டலாம் என்பதை யூட்யூப் மறுத்துள்ளது. உள்ளீடுகளை நீக்கும் அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு, தானாகவே அனுமதி வழங்கப்படாது என யூட்யூப்பின் பேச்சாளர் பெண்மணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு தெளிவான சமூக வழிகாட்டுதல்கள் இருப்பதாகவும், காணொளிகள், அவ்விதியை மீறும் பட்சத்தில் அந்த காணொளிகளை நீக்குவோம் எனவும், நாங்கள், உள்ளூரில் ஆரம்பித்த பதிப்புகளில், ஒரு காணொளி, அந்நாட்டில் சட்டரீதியற்றது என நாங்கள் கருதப்பட்டால், அதைப் பரிசீலனைக்குட்படுத்தி, அந்தக் காணொளியை தடை செய்யப்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
தடை விலக்கிக் கொள்ளப்பட்டதை, பல இளம் பாகிஸ்தானியர்கள் வரவேற்றுள்ளநிலையில், மறுபக்கம், சில ஆர்வலர்கள், கூகிளுடனான ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க திரைப்படமான இனசன்ஸ் ஒஃப் முஸ்லிம்கள் என்ற திரைப்படம் தரவேற்றப்பட்டதைத் தொடர்ந்தே பாகிஸ்தானில் யூட்யூப் மீதான தடை, 2012ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தால் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இலங்கை, பாகிஸ்தான், நேபாளத்துக்கு தனியான இணையத்தள உள்ளூர் பதிப்புக்களை வெளியிட்டுள்ளதாக கூகிள், கடந்த வாரம் தெரிவித்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
23 minute ago
48 minute ago