Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 07 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றில் முதன்முறையாகத் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பானது வின்வெளியில் இடம்பெறவுள்ளது.
பிரபல ரஷ்ய திரைப்பட இயக்குனர் க்ளிம் ஷிபென்கோவின் (Klim Shipenko)’த சேலஞ்ச்’ 'The Challenge'என்ற படத்தின் குழுவினரே இவ்வாறு விண்வெளிக்குச் சென்றுள்ளனர்.
இக்குழுவில் இயக்குனர் க்ளிம் ஷிபென் கோ, நடிகை யுலியா பெரெஸில்ட், விண்வெளி வீரர் ஆன்டன் ஷ்கேப்லெரோவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விண்வெளி வீரரைக் காப்பாற்ற விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் பெண் மருத்துவரின் கதைதான் இதன் படக் கதை யெனத் தெரிவிக்கப்படுகின்றது.
கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்திலிருந்து சோயூஸ் எம்.எஸ்-19 ராக்கெட் மூலம் அவர்கள் விண் வெளிக்குச் சென்றனர் எனவும் அங்கு 12 நாட்கள் படப்பிடிப்பு நடத்த இருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
26 minute ago
47 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
47 minute ago
58 minute ago
1 hours ago