2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

இன்று பி.ப 13.11க்கு சூரிய கிரகணம்

Kanagaraj   / 2015 மார்ச் 20 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபூர்வமானதும் முழுமையானதுமான சூரிய கிரகணம் 16 வருடங்களுக்குப் பிறகு இலங்கை நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை பி.ப. 13.11 தொடக்கம் மாலை 5.20 வரைக்கும் தென்படவுள்ளது. இந்த சூரிய கிரகணத்தால் ஐரோப்பிய நாடுகள் சில இருளில் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும்; இந்த சூரிய கிரகணம் இலங்கையில் தென்படாது என்பதுடன் இலங்கையில் இதனது தாக்கமும் இருக்காது என்று ஆதர் சி. கிளாக் நிறுவகத்தின் கடமைநேர வானியல் நிபுணர் தெரிவித்தார். 

'சுப்பர் மூன்' என்ற அழைக்கப்படும் இந்த சூரிய கிரகணம் இதற்கு முன்னர் 1999ஆம் ஆண்டு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று நிகழவுள்ள இந்த அபூர்வ கிரகணமானது லண்டன், நோர்வே உள்ளடங்கலாக பல்வேறு ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டினேவிய நாடுகளிலும், பராயா தீவுகளிலும், ஆபிரிக்கா மற்றும் ஆசியா கண்டத்தின் சில நாடுகளிலும் தென்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் இவற்றுள் சில நாடுகளில் சூரிய ஒளி 80 சதவீதம் வரை குறைவடைந்து இருள்மயமாகிவிடும் என்று விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.  

இதேபோன்றதொரு சூரிய கிரகணம் இதற்குப் பிறகு 2026ஆம் ஆண்டிலேயே ஏற்படும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் 04ஆம் திகதி இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சந்திர கிரகணம் ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .