Shanmugan Murugavel / 2016 ஜனவரி 15 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்நிகர் தலையணியைப் பயணிகள் அணிந்து செல்லும் rollercoaster பயணம் தொடர்பான திட்டங்களை Alton Towers அறிவித்துள்ளது. இரண்டு வருட திட்டத்தைத் தொடர்ந்து, எதிர்வரும் ஏப்ரலில் Galacticaவை திறக்கவுள்ளதாக சாகசப் பூங்காவான Alton Towers தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு ஜூன் மாதத்தில், Alton Towersஇல் உள்ள rollercoasterகளில் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் படுகாயமடைந்தைத் தொடர்ந்து, Alton Towersஇன் முதலாவது பெரிய rollercoaster பயணத் திட்டம் இதேவேயாகும். மேற்படி விபத்தைத் தொடர்ந்து Alton Towersக்கு வருகை தருவோர் எண்ணிக்கை குறைவடைந்தபோதும், மேற்படி விபத்தானது மனிதத் தவறாலேயே நிகழ்ந்தது என Alton Towers தெரிவித்திருந்தது.
Galacticaஇன் மூன்று நிமிடப் பயணத்தின்போது, தலையணிகளானவை, வெவ்வேறு பால்வெளி மண்டலகளுக்குகூடாக தொடர்ச்சியாக செல்லும் அனுபவத்தை பயணிகளுக்கு வழங்குவதுடன், பயணத்தின்போது திரும்பும் சுழலும் வீழ்ச்சியடையும் அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, அதிகமாக 3.5 கிராம் புவியீர்ப்பு விசையை பயணிகள் உணரும் வகையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தளவிலான புவியீர்ப்பு விசையையே, விண்வெளியியலாளர்கள், ரொக்கெட் ஏவப்படும்போது உணருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025