Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 நவம்பர் 13 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
Yarl Geek Challenge 5 இல் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக அனைவராலும் இனங்காணப்பட்ட அணி “Kryptonite” ஆகும். வேம்படி மகளிர் மாணவிகளின் இவ்வணி, “HelpMate” எனும் ஓர் இணையத்தள செயலியினை உருவாக்கியிருந்தனர்.
HTML 5, JavaScript, PHP ஆகிய தொழில்நுட்பங்களின் துணை கொண்டு உருவாக்கப்பட்ட இச்செயலி, புதிய தொழில்தொடங்குநர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையப்போகிறது. புதிய தொழில்தொடங்குநர் ஒருவருக்கு வழமையாக முட்டுக்கட்டையாக அமையும் வெளிக்கள சேவைகளாகிய விளம்பரப்படுத்தல், கணக்கியல், தணிக்கை, சட்ட ஆலோசனைகள் மாற்று பிறசேவைகள் அனைத்தையும் ஓரே தளத்தில் பெறக்கூடிய வசதியினை HelpMate கொண்டுள்ளது.
தற்காலத்தில் உருவாகின்ற தொழில்முயற்சிகளில் பெரும்பாலானவற்றின் தோல்விக்கு காரணமாக அமைவது, தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தொழில்முனைவோர்கள், பிறசேவைகளில் கவனம் செலுத்துவதில்லை. பல தொழில்முயற்சிகள், சரியான விளம்பரப்படுத்தல், கணக்கியல் முகாமை இல்லாமல் தோல்வியில் முடிக்கின்றன. உலகம் முழுவதிலும் ஐந்து சதவீதமான தொழில்முயற்சிகள் மட்டுமே ஐந்து வருடத்துக்கு மேல் ஆயுளைக் கொண்டுள்ளன. சரியான சேவை ஆலோசனைகள், சேவைகள் என்பன அனுபம்வாய்ந்த முறையில் செயற்படுத்துவதன் மூலம் தொழில்வளர்ச்சிகளை மேம்படுத்த இச்சசெயலி வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
சட்ட ஆலோசகர்கள் மூலம் தொழிமுயற்சினை பதிவு செய்வது முதல் தொழிலுக்கான வருடத் தணிக்கை செய்வது வரை அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் கிடைப்பது ஒரு HelpMate-இன் வரப்பிரசாதமாகும்.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago