Editorial / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சிவப்பு நிற “டெஸ்லா கார்”, பூமி மீது மோதும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். சிவப்பு நிற டெஸ்லா கார் ஒன்று, விண்ணை நோக்கி ஏவப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தற்பொழுது இந்த கார் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், பூமி மீது மோதும் வாய்ப்பு உண்டு என்றும் கூறப்பட்டுள்ளது.
இது டெஸ்லா நிறுவனத்திற்குச் சொந்தமான “சேர்ரி ரெட் டெஸ்லா கார்” ஆகும்.அந்த நிறுவனத்தின் தலைவர், எலோன் மஸ்க் தன்னுடைய கலெக்சனில் (collection) வைத்திருந்த கார் இதுவாகும்.
விண்ணுக்குச் சென்ற ஆரம்பத்தில் பேட்டரியில் இயங்கிக் கொண்டிருந்தது. எனினும் 4 மணி நேரத்தில் அதன் பேட்டரி தீர்ந்துவிட்டது. இந்த நிலையில் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை அடைய 6 மாத காலங்கள் எடுத்தது.
தற்பொழுது இந்த கார் 300 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. மேலும் 2091 இல் மீண்டும் பூமிக்கு அருகில் வரும், அப்போது பூமி மீது நிச்சயமாக மோதும், என்று கூறப்பட்டுள்ளது.
ஹன்னோ ரெயின், டேனியல் தாமயோ, டேவிட் வொக்ரோஸ்லிக் ஆகியோர் இந்த தகவலைத் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கான ஆராய்ச்சிக் கட்டுரையை நாசாவில் சமர்ப்பிக்க இருக்கிறார்கள்.
எனினும் இதற்கான வாய்ப்புக் குறைவு என்றும் கூறியுள்ளனர். இது பூமி மீது மோத 6 சதவீத வாய்ப்பும், அதிகபட்சம் 3 வருடங்களுக்குள் மொத்தமாக நொறுங்கி உடையவும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 minute ago
20 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 minute ago
38 minute ago
1 hours ago