Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 27 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஆறு மாதங்களில், அப்பிளின் வருமானம் வீழ்ச்சியடைந்ததுக்கான பிரதான காரணமாக, ஐபோன்களின் விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சியே கருதப்படுகிறது. பத்தாண்டுகளுக்கு மேலாக, சாதனை ரீதியிலான வருமான வளர்ச்சியைப் பதிவு செய்த அப்பிள், தனது திறன்பேசிக்கான நுகர்வோர் கேள்வி வீழ்ச்சியடைந்துள்ளதை அவதானிக்கிறது.
ஐக்கிய அமெரிக்காவில், கடந்த செப்டெம்பர் 24ஆம் திகதியோடு நிறைவடைந்துள்ள நான்காவது காலாண்டில், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியோடு ஒப்பிடுகையில், அப்பிளின் வருமானமானது, 9.8 சதவீதத்தால், 46.9 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்ததுடன், இலாபமானது, 23 சதவீதத்தால், 9 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது. எவ்வாறெனினும் குறித்த தரவுகளானவை, ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகளுடன் ஏறத்தாழ ஒத்துப் போகிறது.
குறித்த வீழ்ச்சி ஏற்பட்டதற்கு பிரதான காரணம், ஐபோன்களின் மெதுவான விற்பனை ஆகும். கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட 13 சதவீதத்தால், 45.5 மில்லியன் ஐபோன்களால், ஐபோன் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையிலேயே, 2001ஆம் ஆண்டுக்குப் பின்னர், அப்பிளின் வருடாந்த வருமானத்தில், முதற்தடவையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த சில காலாண்டுகளாக, வேகமாக வளர்ச்சியடைந்துவரும் சந்தையாக சீனாவே கருதப்பட்ட நிலையில், இக்காலாண்டில், அது மாற்றமடைந்துள்ளது. பெரிய சீனாப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விற்பனைகளில், கடந்த காலாண்டோடு ஒப்பிடுகையில், இம்முறை, 30 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, அப்பிளின் மிகப்பெரிய திறன்பேசியான ஐபோன் 7 பிளஸை, எத்தனை பேர் வாங்க விரும்கிறார்கள் என்பதில் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அப்பிள், பிழையான கணக்கீடுகளினால், எதிர்வரும் விடுமுறைப் பருவகாலத்தின் இலாபங்கள் பாதிக்கப்படும் என அச்சம் வெளியிட்டுள்ளது. கிறிஸ்மஸ் பருவகாலத்துக்கு முன்னர், நுகர்வோர் வேண்டுகின்ற வகையில், பல ஐபோன் 7 பிளஸ் திறன்பேசிகளை தயாரிக்க முடியுமா என்பது தொடர்பில், அப்பிளின் பிரதம நிறைவேற்றதிகாரியான டிம் குக் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago