Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜனவரி 29 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அலைபேசிக்கும் இணயத்துக்குமான கூகிளின் அடுத்த தலைமுறை மின்னஞ்சல் சேவையான இன்பொக்ஸ் பை ஜிமெயில், கடந்த செவ்வாய்க்கிழமை (26), புதியதொரு, வரவேற்கத்தக்க இற்றைப்படுத்தலொன்றுக்கு உள்ளாகியுள்ளது.
மேற்படி புதிய இற்றைப்படுத்தலின் மூலம், உங்களுடைய மின்னஞ்சல்களில் உள்ள முகவரி, விமான இலக்கங்கள், சந்தாச்சேவைகளின் இலக்கங்கள் என்பவற்றை இலகுவாக அடையாங்காணக்கூடியதாக அமையவுள்ளது.
உங்களது நீண்ட மின்னஞ்சல் உரையாடல்களில் மேற்படித் தகவல்கள் தொலைந்து போகும் நிலை காணப்படுகின்ற நிலையில், ஏற்கெனவே உங்களது முக்கியத்துவத்தின் அடிப்படையிலான வரிசையில் தேடுதல் முடிவுகளை, கூகிள் ஒழுங்கமைத்து காட்சிப்படுத்துகின்ற நிலையில், தற்போது ஒரு படி மேலே சென்றுள்ள கூகிள், கூகிள் தேடலில் உள்ளது போன்று, தேடுதலில் ஈடுபடும் பொழுது, பதிலுக்காக, மின்னஞ்சல்களை வரிசைப்படுத்துவதற்கு பதிலாக சிறிய அட்டை ஒன்றை வெளிப்படுத்தி விரைவாக பதிலை வழங்கப்போகின்றது.
இப்புதிய வசதி காரணமாக, நீங்கள் தேடும் விடயத்திற்காக, தேடுதல் முடிவுகளில் காண்பிக்கப்படும் ஒவ்வொரு மின்னஞ்சலாக சென்று பார்வையிடவேண்டிய தேவை இல்லை என்பதுடன், தற்கால விரைவு உலகக்கு ஏற்ப நொடிப்பொழுதில் உங்களுக்கு தேவையான விடயத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
43 minute ago
51 minute ago
51 minute ago