Editorial / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}


எஸ்.எம்.எம்.முர்ஷித், ஆர்.ஜெயஸ்ரீராம்
வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ வீரையடி விநாயகர் வேதஸ்தான வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்றம் இன்று (18) காலை இடம்பெற்றது.
இதன்போது யாக பூசை, வசந்த மண்டப பூசை என்பன இடம்பெற்று தொடர்ந்து இறைவன் உள் வீதி வலம் வந்ததன் பின்னர் கொடி ஏற்றப்பட்டு கொடிதம்ப பூசைகள் இடம்பெற்றன. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.
மஹோட்சவம் தொடர்ந்து பத்து நாட்கள் இடம்பெற்று எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.
மஹோற்சவ பூசைகள் கிரியாக்ரமஜோதி பிரம்மஸ்ரீ இலக்மிகாந்த ஜெகதீசக் குருருக்கள் மற்றும் ஆலய பிரதம குரு கணபதி பூஜா துரந்தரர் சிவஸ்ரீ.மு.சண்முகம் குருக்கள் ஆகியோர் தலைமையில் இடமபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 minute ago
48 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
48 minute ago
2 hours ago
2 hours ago