Gavitha / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயத்தின் 208 ஆவது வருடாந்த திருவிழாக் கூட்டுத்திருப்பலி, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் பங்குதந்தை அருட்பணி ரமேஷ் கிறிஸ்டி, யேசுசபை துறவி அருட்பணி சகாயநாதன் ஆகியோர் இணைந்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பகல் (16) ஒப்புக்கொடுத்தனர் .
ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை (07), மாலை 05.30 மணிக்கு பங்குதந்தை அருட்பணி ரமேஷ் கிறிஸ்டி தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .
ஆலய திருவிழாவை முன்னிட்டு தினமும் மாலை 05.03 மணிக்கு திருசெபமாலையும், மறைவுரைகளும், பிராத்தனைகளுடன் திருப்பலிகளும் இடம்பெற்றன.சனிக்கிழமை (14), மாலை 05.30 மணிக்கு விசேட நற்கருணை வழிபாடுகளும், மறைவுரைகளும் இடம்பெற்றதுடன் தொடர்ந்து புனிதரின் திருச்சுருவ பவனியும் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .
திருவிழா திருப்பலி ஞாயிற்றுக்கிழமை காலை 07.30 மணிக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையின் தலைமையில் ஒப்புகொடுக்கப்பட்டது. திருப்பலியின் பின் புனிதரின் திருச்சுருவ பவனியும் தொடர்ந்து ஆலய திருநாள் கொடியிறக்கத்துடன் ஆலய வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது.
இன்று இடம்பெற்ற திருவிழா திருப்பலியில் சோமஸ்கன் சபை அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் , சிறிய குருமட மாணவர்கள் , பங்கு மக்கள் என பலரும் திருப்பலியில் கலந்து கொண்டனர்.




8 minute ago
29 minute ago
29 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
29 minute ago
29 minute ago
39 minute ago