Thipaan / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டங்குளம், குமனாயங்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தாமரைத் தடாகத்திலான புனித தோமையார் சிலை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தலைமையில், நேற்று (27) மாலை வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
1984ஆம் ஆண்டளவில், அப்பிரதேசத்தில் காணப்பட்ட தோமையார் சிலை யுத்தத்தின் காரணமாக சேதமடைந்திருந்தது.
இன, மத பேதங்கள் இன்றி அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட புனித தோமையார் சிலையினை அப்பகுதியில் புதிதாக மீண்டும் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, புனித தோமையார் சிலை தாமரைத் தடாகத்தில் சுமார் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், பங்கு மக்கள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



44 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago