எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2017 ஜூலை 01 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

மன்னார், மடு அன்னையின் ஆடி மாத திருப்பலி, நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல் மற்றும் அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை, கூட்டுத் திருப்பலியாக ஒப்பக்கொடுக்கவுள்ளனர்.
மடுத்திருத்தளத்தின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, கடந்த 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மடு ஆலயத்தில் ஆலய பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியாணுஸ்பிள்ளை அடிகளார் தலைமையில் பாப்பரசரின் கொடியும் மடு அன்னையின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த ஒன்பது தினங்கள் மாலையில் திருச்செரூபமாலையுடன் நவ நாள் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், நாளைக் காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி, மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில், கூட்டுத்திருப்பலியாக ஒப்பக்கொடுக்கப்படவுள்ளது.
மடு திருவிழாவுக்கு நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதனைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து, குடிநீர், சுகாதாரம், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியாணுஸ் பிள்ளை அடிகளார் தெரிவித்தார்.
14 minute ago
44 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
44 minute ago
46 minute ago
1 hours ago