2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மாம்பழத் திருவிழா

Editorial   / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாளான இன்று (18) காலை தண்டாயுதபாணி உற்சவம் (மாம்பழத் திருவிழா) சிறப்பாக இடம்பெற்றது.
காலை 6.45 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, தொடர்ந்து முருகப்பெருமானும,; பிள்ளையாரும் வெளி வீதி உலா வந்து மாம்பழத் திருவிழா இடம்பெற்றது.

சிவபெருமானும், உமாதேவியாரும் தமது பிள்ளைகளான முருகன் மற்றும் பிள்ளையாரிடம் உலகை முதலில் சுற்றி வருபவர்களுக்கு மாம்பழம் தருவோம் என கூறியபோது, முருகன் மயில்மேல் ஏறி உலகைச் சுற்றி வர, பிள்ளையார் தன் பெற்றோரை சுற்றிவந்து மாம்பழத்தை பெற்றுக்கொண்ட புராணக்கதையை மையமாகக் கொண்டே இந்த மாம்பழத் திருவிழா இடம்பெற்று வருகின்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X