Editorial / 2026 ஏப்ரல் 10 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

கண்டி மோப்ரே (Mowbray) கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட தேவாலயத்தின் திறப்பு விழா, வியாழக்கிழமை (09) மிக விமர்சையாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி மனோரஞ்சனி கிங்ஸ்லியின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், குருணாகல் மறை மாவட்ட ஆயர் அருட்சந்தை நிஷாந்த பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தேவாலயத்தைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கண்டி மாநகர சபையின் மேயர் சந்திரசிறி விஜயநாயக, கிறிஸ்துவ மிஷனரி சமூகத் தலைவர் ஜே. சேதுராமன், முகாமையாளர் பாக்கியராஜன் ஐயாதுரை ஆகியோருடன் வர்த்தகப் பிரமுகர்கள், கல்விமான்கள் மற்றும் பாதிரியார்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கிறிஸ்தவ மதப் பெறுமதிகளையும் விழுமியங்களையும் வளர்த்தெடுக்கும் நோக்கில், கடந்த 1922-ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த இரண்டு அருட்சகோதரர்களால் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மெய்யன்










21 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
51 minute ago
1 hours ago