2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயத்தில் ஸ்ரீராமநவமி விழா

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயத்தில் ஸ்ரீராமநவமி விழா, புதன்கிழமை (5) கொண்டாடப்படவுள்ளது.

அரச தர்மம், மனித தர்மம், ஸ்திரீ தர்மம் என்று தர்மங்களை நடைமுறையில் காட்ட, தர்மத்தின் நாயகன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணா, ஸ்ரீராமபிரானாக மனித வடிவில் அவதரித்த தினமே, ஸ்ரீராம நவமி எனச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மாலை 5 மணி தூப ஆராத்தியைத் தொடர்ந்து, விசேடநிகழ்ச்சியாக, தியாகராஜ பிரஹ்மத்தின் பஞ்சரத்தின கீர்த்தனைகள் இசை வல்லுநர்களால் இசைக்கப்படும்.

மாலை 6 மணிக்கு துளசி ஆராத்தி 7 மணிக்கு இராமபிரானுக்கான ஆராதனையும் ஊஞ்சல் ஆட்டும் வைபவமும், தொடர்ந்து பிரசாதம் வழங்கலும் இடம்பெறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X