Princiya Dixci / 2022 மே 03 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் கோவிலின் முதலாவது நவோத்ர சகஸ்ர சத மகா சங்காபிஷேகம், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) நடைபெறவுள்ளது.
கோவிலின் முதலாவது கும்பாபிஷேகம், கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி நடைபெற்றதுடன், தற்போது மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகின்றன .
கோவில் பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் தலைமையில் 1,008 சங்குகளுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) காலை 08 மணிக்கு சங்காபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி, முற்பகல் 11 மணியளவில் சங்காபிஷேகம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
சங்காபிஷேகத்தில் கலந்துகொள்ளும் அடியார்களுக்கு மீனாட்சி அம்மனின் திருவுருவப்படம் பொறித்த அட்டை வழங்கப்பட இருக்கின்றது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago