2025 ஜூலை 09, புதன்கிழமை

திஸ்பனை, ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய திருவிழா

Kogilavani   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


லிந்துலை,  திஸ்பனை தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வருடாந்த  திருவிழா  செவ்வாய்க்கிழமை மஞ்சள் நீராடலுடன் நிறைவு பெற்றது.

இத்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை (11) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.  இத்திருவிழாவில், ஞாயிற்றுக்கிழமை(13) காலை விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகி ஸ்ரீ முத்துமாரியம்மன் குதிரை வாகனத்தில் தோட்ட வெளிவீதி வலம்வந்ததுடன் மாலை மாவிளக்கு பூஜை இடம்பெற்றது.

இதேவேளை, திங்கட்கிழமை (14) காலை பரவக்காவடி, தீமிதிப்பு, அன்னதானம் என்பன இடம்பெற்று மாலை அலங்கரிக்கப்பட்ட முத்துச் சப்பரத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ முருகப்பெருமான் ஆகியோர் வீதிவலம் வந்தனர்.

இறுதிநாளான செவ்வாய்க்கிழமை (15) மஞ்சள் நீராட்டு விழா, கொடியிரக்கத்துடன் தேர்த்திருவிழா நிறைவுபெற்றது. கிரியைகள் யாவும் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ. வேலு கந்தசாமி குருக்கள் தலைமையில் இடம்பெற்றன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .