2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புனித தூய திருத்துவ ஆலய பூர்த்தி விழா விஷேட ஆராதனை

Kanagaraj   / 2014 மே 20 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-புஸ்ஸல்லாவ நிருபர்


புஸ்ஸல்லாவ புனித தூய திருத்துவ ஆலயத்தில் 155 வருட பூர்த்தி விழாவும் விஷேட ஆராதனையும் குருநாகல் மறைமாவட்ட பேராயர் அதி.வணகத்திற்குரிய சாந்தா பிரான்சிஸ் மற்றும் புஸ்ஸல்லாவ தூய திருத்துவ ஆலய பங்குதந்தை அருட்தந்தை ஜோன்ராஜ் அவர்களினதும் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பேராயர் அதி.வணகத்திற்குறிய சாந்தா பிரான்சிஸ் அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டதுடன் விஷேட ஆராதனை, ஞானஸ்த்தானம் வழங்கும் நிகழ்வு என்பன இடம் பெற்றன.

இதன் போது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன், நாட்டிற்கு சாந்தி, சமாதானம் வேண்டியும் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அனைத்து மக்களுக்கும் நல்லாசி வேண்டியும்  விஷேட ஆராதனைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X