Editorial / 2017 ஜூலை 16 , பி.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு, தூவ சிந்தாத்ரி தேவ மாதா தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தையொட்டி, மீனவர்களின் பாதுகாப்பு வேண்டியும் கிராம மக்களுக்கு ஆசிர்வாதம் வேண்டியும், 500இற்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய மீன்பிடிப் படகுகளில் பயணித்து பிரார்த்தனையில் பங்குபற்றும் நிகழ்வு, இன்று (16) காலை நடைபெற்றது.
இதன்போது, தூவ மீன் விற்பனைச் சந்தைக்கு அருகில் களப்புப் பகுதியில் இருந்து, கடற்பகுதியில் இரண்டு மைல் தூரத்துக்கு படகுகளில் பயணம் செய்து அங்கு பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது. மீனவ படகுகளின் பாதுகாப்புக் கருதி, சிறிய படகுகளில் உயிர் காப்பு பணியாளர்களும் சென்றனர்.
தூவ சிந்தாத்ரி தேவ மாதா தேவாலயத்தில் இருந்து சொரூபம் ஊர்வலமாக வந்து தூவ மீன் விற்பனைச் சந்தையில் சமய நிகழ்வு இடம்பெற்றது. பின்னர், தேவ மாதாவின் சொரூபம் பெரிய படகொன்றில் ஏற்றப்பட்டு களப்பினூடாக, கடல் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

15 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago