Freelancer / 2023 ஏப்ரல் 04 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
மலையக மக்களின் இலங்கை வருகையுடன் தொடர்புடைய பழைமை வாய்ந்த கண்டி, பன்விலை க்ளாஸ் டௌன் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்த திருவிழா 9 ஆம் திகதி வரை தொடர்ந்து 9 நாட்கள் விமர்சையாக நடைபெறவுள்ளது. 3 ஆம் திகதி திங்கட்கிழமை கிராப சாந்தி வாஸ்து சாந்தி பூசைகள் நடைபெற்றன.
4 ஆம் திகதி விசேட தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்படும். ஐந்தாம் திகதி புதனன்று முற்பகல் 9 மணிக்கு வேல் பூட்டு வைபவம் இடம்பெற்று பறவைக்காவடி ஊர்வலம் இடம்பெற்று தீ மிதிப்பு வைபவம் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூசையுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.அன்றைய தினம் மாலை வசந்த மண்டப பூசை நடைபெற்று ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேரிலேறி ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பாள்.
6ஆம் திகதி விசேட தீபாராதனை நடைபெற்று விபூதி பிரசாதம் வழங்கப்படும்.ஏழாம் திகதி மாவிளக்கு பூசை நடைபெறுவதோடு அடுத்த நாள் எட்டாம் திகதி பால் குட பவனியும் விசேட பூசைகளும் இடம்பெற்று அடுத்த நாள் கரகம் ஊர்வலம் வந்து குடிவிடுதலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுறும்.
17 minute ago
24 minute ago
34 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
24 minute ago
34 minute ago
41 minute ago