Gavitha / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் 'தெய்வீக கிராமமாக மாற்றுவோம்' எனும் தொனிப்பொருளில் நிகழ்வொன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை(16), காலை 9 மணியளவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது, திருக்கோவில் பிரதேச செயலத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்,இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆ.உமாமகேஸ்வரன், உதவிப் பணிப்பாளர் ஹேமலோஜினி குமரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக வருகை தந்திருந்தனர்.
விநாயகபுரம் சித்தி விநாயகர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து கோமாதா வழிபாடு, வில்லவமரம் நடுகை, நந்திக்கொடியேற்றல், அறநெறிக்கீதம் இசைத்தல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து, அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அதேநேரம், பாடசாலை ஆசிரியர்களுக்கெனச் சைக்கிள்களும் வழங்கி வைக்கப்பட்டன. உகந்தை முருகன் ஆலய யாத்திரிகளின் மடத்தினை நிர்மாணிப்பதற்கென முதற்கட்டமாக, 5 இலட்சம் ரூபாய் நிதியும் வழங்கிவைக்கப்பட்டது. அதேநேரம், 23 ஆலங்களுக்கெனத் தலா ஒரு இலட்சம் ரூபாய் காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் நடைபெற்றது.கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், சுமார் 700 பேருக்கான அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.




15 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago