Editorial / 2026 மார்ச் 22 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ. அச்சுதன்
தக்ஷிண கைலாசம் எனப் போற்றப்படும் திருகோணமலையில் அருளாட்சி புரியும் வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா (மஹோற்சவம்), ஞாயிற்றுக்கிழமை (22) காலை கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது.
காலை 8.00 மணியளவில் 'துவஜாரோகணம்' எனும் கொடியேற்ற நிகழ்வு பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. ஆலயத்தின் பிரதம குரு பிரம்மஸ்ரீ சோ. இரவிச்சந்திரக் குருக்கள் தலைமையில், கொடியேற்றத்திற்கான விசேட பூசைகளும் கிரியைகளும் இடம்பெற்றன.
இந்த மஹோற்சவக் காலங்களில் அம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். இன்றைய ஆரம்ப நிகழ்வில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளின் அருளாசியைப் பெற்றனர்.






4 minute ago
14 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
4 hours ago