2025 மே 02, வெள்ளிக்கிழமை

தெல்லிப்பழை துர்காதேவி தேவஸ்தான மஹோற்சவம் ஆரம்பம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி  தேவஸ்தானத்தின் மஹோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 

12 நாட்கள் இடம்பெறவுள்ள மஹோற்சவம் எதிர்வரும் செப்டம்பர் 08 ஆம் திகதி, வியாழக் கிழமை ஆவணித் திருவோண தினத்தன்று காலை 8.30 மணிக்கு “துர்க்கா புஷ்கரணி” தீர்த்தத் தடாகத்தில்  இடம் பெறவுள்ள தீர்த்தோற்சவம் மற்றும் மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ள கொடியிறக்கத்துடன் நிறைவு பெறவுள்ளது. 

தினமும் முற்பகல் 9.30 மணிக்கும், பிற்பகல் 5.30 மணிக்கும் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் திருவீதி உலா இடம்பெறும். 

மஹோற்சவ காலத்தில் அம்பிகை அடியவர்கள் ஆசார சீலர்களாக, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வருகைதந்து வழிபாடியற்றி அம்பிகையின் அஷ்ட சித்திகளையும் பெற்றுய்யுமாறு தேவஸ்தான நிர்வாக சபை கேட்டுக் கொண்டுள்ளது. (R)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X