2024 மே 15, புதன்கிழமை

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்றம்...

Editorial   / 2023 ஜூன் 19 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா திங்கட்கிழமை (19) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று கொடியேற்ற உற்சவம் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து நாகபூசணி அம்பாள் பிள்ளையார் மற்றும் முருகபெருமான் சகிதம் வலம்வந்து வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.

இவ் கொடியேற்ற திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ச்சியாக 16தினங்கள் இடம்பெறவுள்ள நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலின் 2023ஆம் ஆண்டுக்கான  திருவிழா ஜூலை 01 ம் திகதியன்று சப்பரத் திருவிழாவும் ஜூலை 02 ம் திகதியன்று தேர்த்திருவிழாவும் ஜூலை 03 ம் திகதியன்று தீர்த்தோற்சவமும் ஜூலை 04ஆம் திகதியன்று தெப்போற்சவத்துடனும் நிறைவுபெறவுள்ளது.

 

நிதர்ஷன் வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .