2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மூலஸ்தானத்துக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

Thipaan   / 2016 நவம்பர் 05 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு, ஆரையம்பதி ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தில், ரூபாய் 4 மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ள  மூலஸ்தானத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை (04) நடைபெற்றது.

ஆலயத்தின் தலைவர் அ. கிருபைரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆலய பிரதம குருவும் கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் மாணவருமாகிய விஸ்வப்பிரம்ம ஸ்ரீ அ. கி. சர்வேஸ்வரன் அடிக்கல் நாட்டவதற்கான கிரியைகளை நடாத்தினார்.

மேற்படி ஆலயமானது புனருத்தாபன வேலைகளுக்காக கடந்த 14.09.2016 அன்று பாலஸ்தாபனம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X