2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மஹா சிவராத்திரி தினம்

Kogilavani   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி, எம்.செல்வராஜா

மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, இரத்தினபுரி, இரத்தினேஸ்வரர் சிவன் கோயிலில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை, விசேட பூஜை வழிபாடுகள், இடம்பெறவுள்ளன.

அன்றைய தினம் மாலை முதல் அடுத்தநாள் காலை வரை, நான்கு சாம பூஜைகளை நடத்துவதற்கு, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பூஜை வழிபாடுகள் யாவும், ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கைலாசநாத சிவாச்சியார் தலைமையில் நடைபெறும்.

பூஜை வழிபாடுகளிளுக்கிடையே, அறநெறிப் பாடசாலை மற்றும் பிரதேச பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, பசறை, தன்னுகை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை, மஹா சிவராத்திரி தின பூஜைகள், வெகு விமர்சையாக நடைபெறவுள்ளன.

நான்குசாம பூஜைகள், கலை நிகழ்வுகள் என்பன இதன்போது இடம்பெறவுள்ளன. சிவஸ்ரீ இளங்கோ குருக்கள், பூஜைகளை நடத்தவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X