2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வல்லிபுரக் கோயில் திருவிழா ஆரம்பமானது

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 01 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். தில்லைநாதன்

யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயிலின் கடந்தாண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. திருவிழா தொடர்ந்து 17 தினங்கள் நடைபெறவுள்ளது.

சிறப்புத் திருவிழாக்களான வெண்ணைத் திருவிழா இம்மாதம்  9ஆம் திகதி புதன்கிழமையும், துகில் திருவிழாவும் 10ஆம் திகதி வியாழக்கிழமையும், பாம்புத் திருவிழா 11ஆம் திகதி வெள்ளிக் கிழமையும், கம்பன் போர்த்திருவிழா 12ஆம் திகதி சனிக்கிழமையும், வேட்டைத் திருவிழா 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும், சப்பரத்திருவிழா 14ஆம் திகதி திங்கட் கிழமையும், தேர் திருவிழா 15ஆம் திகதி செவ்வாய்க் கிழமையும், சமுத்திரத் தீர்த்தத் திருவிழா 16ஆம் திகதி புதன்கிழமையும், கேணித்திருவிழா 17ஆம் திகதி வியாழக்கிழமையும் அன்று மாலை கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.

கடந்தாண்டு புரட்டாதி மாதம் நடைபெறவேண்டிய திருவிழா கடுமையான கொரோனாத் தொற்றுக் காரணமாக இவ்வருடம்  பெப்ரவரி மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .