2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

வாய்ப்பூட்டு?

Editorial   / 2019 ஜூலை 31 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

யானைக் கட்சியின் பின் வரிசை வாயாடி எம்.பிக்கள் சிலர், கட்சியின் சில அரசியல் முடிவுகள் குறித்து, இடத்துக்கிடம் பேசித் திரிவதாக, கட்சியின் உயர்நிலைத் தரப்பினர் கடுப்பாகி உள்ளனராம்.

விசேடமாக, திரைக்குப் பின்னால் இடம்பெறும், பொதுத் தேர்தல், தேசிய அரசாங்கம் தொடர்பிலான பேச்சுகள் குறித்து அதிருப்தி கொண்டுள்ள ஊவாவைச் சேர்ந்த வாயாடி எம்.பி குறித்தே, இவர்கள் பெரும்பாலும் கடுப்பாகி உள்ளனராம்.

மணிக் கட்சியினரால் மெது மெதுவாகத் தள்ளப்பட்டு வரும் நிறைவேற்றை ஒழிக்கும் யோசனை விடயத்திலும், யானைக் கட்சியின் பின் வரிசை  எம்.பிக்கள் பிரிந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக, வெளியே ​சென்று குறைகூறும் எம்.பிக்கள் சிலருக்கு, வெகு விரைவில், கடுமையான எச்சரிக்கையொன்று விடப்படவுள்ளதாக அறியக்கிடைக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X