2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

‘அந்த’ இடத்தை ரூ.13 கோடிக்கு இன்சூர் செய்த அழகி

Editorial   / 2022 ஜூலை 24 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுவாக மனிதர்கள் விலையுயர்ந்த பொருள்களை வைத்திருந்தால் அவர்கள் அதை இன்சூர் செய்து கொள்வார்கள். குறிப்பாக கார், வீடு, பைக், ஏன் வாழ்க்கையையே இன்சூர் செய்ய லைஃப் இன்சூரன்ஸ் இருக்கிறது.

இப்படி இருக்கையில் ஒரு மாடல் அழகி தன் பிட்டத்தை இன்சூர் செய்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி நேத்தி கிய்ஹாரா. 35 வயதான இவர், சமீபத்தில் உலகிலேயே அழகான பிட்டம் கொண்ட பெண் என சமீபத்தில் உலக பிட்ட அழகி பட்டம் பெற்றார்.

2021ஆம் ஆண்டுக்கான இந்த பட்டத்தை இவர் இன்ஸ்டாகிராமில் நடந்த வாக்கெடுப்பின் மூலம் அதிகமான மக்கள் வாக்களித்ததில் பெற்றார்.

இந்த அழகி பட்டம் பெற்ற பின்பு தன் பிட்டத்தை இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றின் மூலம் இன்சூர் செய்துள்ளார். இதற்காக அவர் 1.3 மில்லியன் பவுண்ட்ஸ் அதாவது இந்திய மதிப்பில் ரூ12.95 கோடி பணம் கட்டியுள்ளார்.

இவருக்கு தற்போது இருக்கும் பிட்டத்தில் அளவு பத்தவில்லையாம். எனவே, மீண்டும் பல உடற் பயிற்சிகள் செய்து பிட்டத்தை பெரிதாக்க விரும்புகிறாராம். இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .