Ilango Bharathy / 2022 டிசெம்பர் 20 , மு.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
1606 – வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்காக்களில் இடம்பெற்ற முதலாவது நிரந்தர ஆங்கிலக் குடியேற்றத் திட்டமாகும்.
1803 – பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
1808 – இலண்டனில் கோவெண்ட் பூங்கா நாடக அரங்கு தீக்கிரையானது.
1832 – போக்லாந்து தீவுகளைக் கைப்பற்றும் பொருட்டு கப்டன் ஓன்சுலோ தலைமையில் பிரித்தானியப் படைக்கப்பல் எமொண்ட் துறைமுகத்தை வந்தடைந்தது.
1844 – இலங்கையில் அடிமை முறையை முற்றாக ஒழிக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
1860 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: தெற்கு கரொலைனா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முதலாவது மாநிலமானது.
1915 – முதலாம் உலகப் போர்: கடைசி ஆத்திரேலியப் படையினர் கலிப்பொலியில் இருந்து வெளியேறினர்.
1917 – சோவியத் ஒன்றியத்தின் முதலாவது இரகசியக் காவற்துறை 'சேக்கா' அமைக்கப்பட்டது.
1924 – இட்லர் லான்ட்சுபெர்கு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தன்னார்வப் படை 'பறக்கும் புலிகள்' சீனாவில் குன்மிங் நகரில் முதலாவது சமரை நிகழ்த்தியது.
1942 – இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா சப்பானியர்களின் வான் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.
1943 – பொலிவியாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1948 – புதிதாக உருவாக்கப்பட்ட இந்தோனேசியக் குடியரசின் தற்காலிகத் தலைநகர் யோக்யகர்த்தாவை டச்சுப் படைகள் கைப்பற்றின.
1951 – அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக அமெரிக்காவில் ஐடஹோ மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை எரிக்கப் பயன்பட்டது.
1952 – ஐக்கிய அமெரிக்க வான்படை விமானம் வாசிங்டனில் மோதி வெடித்ததில் 87 பேர் உயிரிழந்தனர்.
1955 – கார்டிஃப் வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.
1957 – போயிங் 707 விமானம் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டது.
1971 – எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற தன்னார்வ அமைப்பு பாரிசு நகரில் தொடங்கப்பட்டது.
1973 – எசுப்பானியப் பிரதமர் 'லூயிஸ் கரேரோ பிளாங்கோ' மத்ரித் நகரில் வாகனக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
1985 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் உலக இளையோர் நாளை ஆரம்பித்து வைத்தார்.
1988 – போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐ.நா சாசனம் வியென்னாவில் கையெழுத்திடப்பட்டது.
1989 – பனாமாவின் அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகாவைப் பதவிலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை பனாமாவுக்கு அனுப்பியது.
1995 – நேட்டோ பொசுனியாவில் அமைதி காக்கும் பணியைத் தொடங்கியது.
1995 – அமெரிக்க போயிங் விமானம் ஒன்று கொலம்பியாவில் மலை ஒன்றுடன் மோதியதில் 159 பேர் உயிரிழந்தனர்.
1999 – மக்காவு போர்த்துகலிடம் இருந்து சீனாவிடம் கைமாறியது.
2000 –யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
2004 – வட அயர்லாந்து பெல்பாஸ்ட் நகரில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து £26.5 மில்லியன் பணம் கொள்ளையிடப்பட்டது.
2007 – இரண்டாம் எலிசபெத் அதிக காலம் ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சியாளராக இருந்த பெருமையைப் பெற்றார்.
சிறப்பு நாள்
அடிமை ஒழிப்பு நாள்
31 minute ago
32 minute ago
50 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
32 minute ago
50 minute ago
56 minute ago