Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 27 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1703 – இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்கு போர்த்துக்கீசருக்கு தனியுரிமை வழங்கும் ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில ஏற்பட்டது.
1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கப் பெரும்பாய்க்கப்பல் கரொலைனா அழிக்கப்பட்டது.
1831 – சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.
1845 – பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் பயன்படுத்தப்பட்டது.
1864 – இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
1911 – இந்தியாவின் தேசியப் பண் ஜன கண மன முதன்முதலில் கல்கத்தா நகரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இசைக்கப்பட்டது.
1915 – யாழ்ப்பாணத்தின் முதல் பொது நூலகம் 'நகுலேசுவரா நூல் நிலையம்' கீரிமலையில் திறக்கப்பட்டது.
1918 – செருமனியருக்கெதிரான பெரும் எழுச்சி போலந்தில் ஆரம்பமானது.
1922 – உலகின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் சப்பானின் ஓஷோ சேவைக்கு விடப்பட்டது.
1945 – 29 நாடுகளின் ஒப்புதலுடன் அனைத்துலக நாணய நிதியம் உருவாக்கப்பட்டது.
1949 – இந்தோனேசியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது.
1956 – தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
1966 – உலகின் மிகப் பெரும் குகை மெக்சிக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டது.
1968 – சந்திரனுக்கான முதலாவது மனித விண் வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 வெற்றிகரமாக பசிபிக் கடலில் இறங்கியது.
1978 – எசுப்பானியா 40 ஆண்டுகால பாசிச சர்வாதிகார ஆட்சியின் பின்னர் ஜனநாயக நாடானது.
1979 – சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானைக் கைப்பற்றியது. அதிபர் ஹபிசுல்லா அமீன் சுட்டுக்கொல்லப்பட்டு பப்ராக் கர்மால் தலைவரானார்.
1985 – உரோம், வியன்னா விமான நிலையங்களில் பாலத்தீனத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
1989 – உருமேனியப் புரட்சி முடிவுக்கு வந்தது.
1996 – தலிபான் படைகள் ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் பக்ராம் வான்படைத் தளத்தைக் மீளக் கைப்பற்றினர்.
1997 – வடக்கு அயர்லாந்தில் புரட்டஸ்தாந்து துணை இராணுவக்குழுத் தலைவர் பில்லி ரைட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2000 – யாழ்ப்பாணம், தென்மராட்சி மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற எட்டு பொதுமக்கள் இலங்கைப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2002 – செச்சினியாவின் குரோசுனி நகரில் மாஸ்கோ சார்பு அரச தலைமையகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 72 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமடைந்தனர்.
2004 – எஸ்ஜிஆர் 1806-20 என்ற காந்த விண்மீனில் நிகழ்ந்த வெடிப்பினால் அதன் கதிர்வீச்சு புவியை அடைந்தது.
2007 – பாக்கித்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ ராவல்பிண்டியில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
2008 – இஸ்ரேல் காசா மீது மூன்று வாரத் தாக்குதலை ஆரம்பித்தது.
2016 – இலங்கையின் 14 ஆவது பிரதமர், ரட்ணசிறி விக்கிரமநாயக்க காலமானார்.
32 minute ago
57 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
57 minute ago
58 minute ago