Princiya Dixci / 2021 மார்ச் 11 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1702: இங்கிலாந்தின் முதலாவது தேசிய நாளிதழான த டெய்லி கரண்டின் முதல் பதிப்பு வெளியாகியது.
1917: முதலாம் உலகப் போரில் பாக்தாத் பிராந்தியம் ஆங்கிலோ இந்திய படைகளிடம் வீழ்ந்தது.
1985: மிகைல் கொர்பசேவ், சோவியத் யூனியன் தலைவரானார்.
1990: சோவியத் யூனியனிலிருந்து பிரிவதாக லிதுவேனியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1990: சிலியில், பட்றிசியொ அய்ல்வின் 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியானார்.
2004: ஸ்பெய்னின் மட்ரிட் நகர ரயில்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 191 பேர் பலியாகினர்.
2006: சிலியின் முதல் பெண் ஜனாதிபதியாக மிச்சேல் பாச்செலட் பதவியேற்றார்.
2009: ஜேர்மனியில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் பலி.
2010: செபஸ்டியான் பினேரா சிலியின் அரசுத்தலைவராக பதவியேற்றார். இந்நாளில், சிலியின் பிச்சிலெமு பகுதியில் 6.9 அளவு ஏற்பட்ட நிலநடுக்கம் பதவியேற்பு நிகழ்வைப் பாதித்தது.
1983: பாக்கித்தான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக சோதித்தது.
2011: ஜப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலகின் இரண்டாவது பெரிய அணுவுலைப் பேரழிவு இடம்பெற்றது.
2012: ஆப்கானித்தான், காந்தாரம் அருகே அமெரிக்க இராணுவ வீரன் 16 பொதுமக்களைப் படுகொலை செய்தான்.
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago