Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2016 ஏப்ரல் 16 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1492: ஆசியாவிலிருந்து வாசனைத் திரவியங்களைக் கொண்டுவருவது தொடர்பாக கிறிஸ்டோபர் கொலம்பஸுக்கும் ஸ்பெய்ன் அரசாங்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1895: முதலாவது சீன – ஜப்பான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக இருநாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1912: சைபீரியாவில் வேலை நிறுத்தம் செய்த தங்கச்சுரங்க ஊழியர்கள் மீது ரஷ்ய படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் சுமார் 150 பேர் பலி.
1941: ஜேர்மனியிடம் யூகோஸ்லாவியா சரணடைந்தது.
1946: பிரான்ஸிடமிருந்து சிரியா சுதந்திரம் பெற்றது.
1961: கியூபாவில் பிடெல் காஸ்ட்ரோவின் ஆட்சியை அகற்றுவதற்காக அமெரிக்காவிலிந்து சி.ஐ.ஏ.யினால் பயிற்றுவிக்கப்பட்ட 1,400 கியூப அகதிகள் கியூபாவில் தரையிறக்கப்பட்டனர். இவர்களில் 100பேர் காஸ்ட்ரோவின் படைகளின் தாக்குதலில் பலியாகினர். 1,189பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.
1971: இந்தியாவின் கல்கத்தா நகரில் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் பங்களாதேஷ் அரசாங்கம் அமைக்கப்பட்டது.
1975: கம்போடியாவில் கெமர் ரூச் படைகள், தலைநகர் நாம்பென்னைக் கைப்பற்றினர். கம்போடிய அரசு சரணடைந்தது.
1986: 335 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் நெதர்லாந்துக்கும் சில்லி தீவுகளுக்கும் இடையில் கைச்சாத்தானது.
2004: இந்தியத் திரைப்பட நடிகை சௌந்தர்யா, பெங்களூரில் விமான விபத்தில் உயிரிழந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
52 minute ago
3 hours ago