2021 ஜூலை 28, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: மே 22

Editorial   / 2021 மே 22 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1906: ரைட் சகோதரர்கள், தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.

1915: ஸ்கொட்லாந்தில் ஐந்து ரயில்கள் ஒன்றோடொன்று மோதியதில், 227 பேர் உயிரிழந்தனர். 246 பேர் காயமடைந்தனர்.

1958: இலங்கையில் ஏற்பட்ட கலவரங்களில், நூற்றுக்கணக்கான தமிழர்கள், சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

1960: தெற்கு சிலியில் ஏற்பட்ட 9.5 ரிச்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதுவே இதுவரையில் பதியப்பட்ட அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும்.

1967: பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில், கடைத் தொகுதி ஒன்று தீப்பிடித்ததில், 323 பேர் உயிரிழந்ததோடு, 150 பேர் காயமடைந்தனர்.

1968: அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலான ஸ்கோர்ப்பியன் மூழ்கியதில், 99 பேர் உயிரிழந்தனர்.

1972: இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்து, குடியரசு ஆகியது. சிலோன் - ஸ்ரீ லங்கா எனப் பெயர் மாற்றம் பெற்றது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்றது.

1990:வடக்கு யேமன் மற்றும் தெற்கு யேமன் ஆகியன இணைந்து யேமன் குடியரசு ஆகியது.

1990: விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.

2004: நெப்ராஸ்காவில் இடம்பெற்ற சூறாவளியால், ஹலாம் நகரம் முற்றிலும் அழிந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .