Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2013 செப்டெம்பர் 10 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1919: ஹொன்டுராஸ் மீது அமெரிக்கா படையெடுத்தது.
1965: பாகிஸ்தானுடனான போரில், லாகூருக்கு அருகிலுள்ள புர்கி நகரை இந்தியப் படைகள் கைப்பற்றின.
1973: சிலியில் ஜனாதிபதி சல்வடோர் அலென்டே, ஜெனரல் பினோசெட் தலைமையிலான இராணுவப் புரட்சி மூலம் பதவி கவிழ்கப்பட்டார்.
1982: லெபனானில் பலஸ்தீன அகதிகளின் பாதுகாப்புக்காக தங்கியிருந்த சர்வதேச துருப்புகள் தலைநகர் பெய்ருத்திலிருந்து வெளியேறின.
1998: கோலாலம்பூரில் பொதுநலவாய விளையாட்டு விழா ஆரம்பமாகியது.
2001: அமெரிக்காவில் செப்டெம்பர் 11 தாக்குதல் இடம்பெற்றது. 4 பயணிகள் விமானங்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு இரு விமானங்கள் நியூயோர்க் இரட்டைக் கோபுரங்கள் மீது மோதப்பட்டன. ஒரு விமானம் வாஷிங்டனினல் பெண்டகன் மீது மோதியது. மற்றொரு விமானம் பென்சில்வேனியா மாநிலத்தில் வீழ்ந்து சிதறியது. இத்தாக்குதல்களில் சுமார் 3000 பேர் பலியாகினர்.
2004: கிறீஸில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 16 பேர் பலியாகினர்.
2007: குண்டுகள் அனைத்துக்கும் தந்தை குண்டு என வர்ணிக்கப்படும் உலகின் மிகப்பெரிய (அணுசக்தியற்ற) குண்டை ரஷ்யா பரீட்சித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025