Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2013 ஒக்டோபர் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1422: பிரான்ஸில் 7 ஆம் சார்ள்ஸ், மன்னராக முடிசூடினார்.
1859: மொராக்கோவுக்கு எதிராக ஸ்பெய்ன் யுத்தப் பிரகடனம்.
1863: 18 நாடுகள் ஜெனீவாவில் சந்தித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை அமைப்பதற்கு இணங்கின.
1922: இத்தாலிய மன்னர் 3 ஆம் விக்டர் இமானுவல், பெனிட்டோ முஸோலினியை பிரதமராக நியமித்தார்.
1923: ஒட்டோமான் இராஜ்ஜியம் கலைக்கப்பட்டபின் துருக்கி குடியரசாகியது.
1941: லிதுவேனியாவில் ஜேர்மன் படைகளால் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1960: பின்னாளில், முஹம்மட் அலி என அறியப்பட்ட, கஸியஸ் கிளே தனது முதலாவது தொழிற்சார் குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றார்.
1961: ஐக்கிய அரபுக் குடியரசிலிருந்து சிரியா வெளியேறியது.
1964: தான்கானீய்காவும் ஸான்ஸிபாரும் இணைந்து தான்ஸானியா குடியரசு உருவாக்கப்பட்டது.
1969: கணினிகளுக்கிடையிலான முதலாவது இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.
1998: தென்னாபிரிக்காவில் வெள்ளையின நிறவெறி ஆட்சிக்காலம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட 'உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்' அறிக்கை வெளியிடப்பட்டது.
1998: ஜோன் கிளென் என்பவர் 77 ஆவது வயதில் விண்வெளிக்குச் சென்றதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற மிக வயதான நபர் எனும் சாதனைக்குரியவரானார்.
1999: இந்தியாவின் ஒரிசாவில் பாரிய சூறாவளி தாக்கியது. 10 ஆயிரம் பேர் பலியானதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.
2002: வியட்நாமின் ஹோசிமின் சிட்டி கடைத்தொகுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 இற்கும் அதிகமானோர் உயரிழந்தனர்.
2004: செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு ஒஸாமா பின்லேடன் நேரடி பொறுப்பேற்பதாகக் கூறும் வீடியோவை அல் ஜெஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
2004: ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ரோமில் சந்தித்து ஐரோப்பிய அரசியலமைப்புக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
2005: இந்தியாவின் டெல்லியில் நடந்த குண்டுத்தாக்குதலில் 60 பேர் பலி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago